Pages

Posted on: Wednesday, April 30, 2014

முகத்தில் முகம் பார்த்து நான் இலக்கியவாதியான கதை……

என்பதுகளின் இறுதியில், தொன்னுறுகளின் ஆரம்பகாலம், இனிய என் இனிய மாணவ பருவத்தில் …..  இலக்கிய எழுத்தாளர்களை அன்னாந்து பார்க்கப்பட்ட காலகட்டம்,
எனக்கு தெரிந்த இலக்கியம் எல்லாம் இரண்டு மதிப்பெண் தரும் நேர் நேர் தேமா, நிறை நேர் புளிமா ……, அதில் கூட இந்த புளிமா மேல எனக்கு ரொம்ப நாளா ஒரு ‘ட்வுட்டு’  அப்புறம் ரொம்ப நாள் கழித்துத்தான் தெரிந்தது, பள்ளிகூட வாசல்ல பாட்டி விற்கிற புளிச்ச மாங்காவுக்கும் இந்த புளிமாவுக்கும் சம்பந்தமில்லைன்னு …..
நமக்கு தெரிந்த இலக்கியம் எல்லாம் அன்னைக்கும், இன்னைக்கும் அவ்ளோ தான்,
அப்படிப்பட்ட காலகட்டத்துலத்தான் ஒரு லைப்ரரில முகம் மாத இதழ் அறிமுகமானது,  படிக்க படிக்க ஏதோ ஒன்று என்னை தன் பால் இழுக்க, அதற்கு முந்தைய இதழை எல்லாம் லைப்ரரியன்கிட்ட கெஞ்சி பழைய ஸ்டோர் ரூமை கிளரி படித்த போது ஒரு இதழில் நல்ல இலக்கியத்தரமான சிறுகதைகளை அனுப்பி வைக்கும்படி அதன் ஆசிரியர் திரு,மாமணி அவர்கள் சிறு குறிப்பு வெளியிட்டு இருந்தார்,  கூடவே போன் நம்பர், முகவரி,

திரும்ப அந்த இலக்கியம்ன்ற அல்ஜிப்பிரா ( நமக்கு ரெண்டும் ஒன்னுத்தான் )  மண்டைய குடைய வெளிய வந்து பொது தொலைபேசியில் இருந்து டிரிங் ,,, டிரிங் ,,,
“முகம் மாத இதழா…?”
“நீங்க”
“….. எனக்கு கதை எழுத ஆசை ,,, இலக்கியம்னா என்னன்னு தெரியாது …. என் கதையை முகத்துல வெளியிடுவீங்களா…?”
“தம்பி நான் ஆசிரியர் மாமணித்தான் பேசுற ….நீங்க என்ன பண்றீங்க? “
“பச்சையப்பன் கல்லூரில படிக்கிற ,,”
மறுமுனையில் சிரித்தபடியே, “அனுப்பிவைங்க நல்லாயிருந்தா கண்டிப்பா போடுற ,,,”
அதே நம்பிக்கையில் ஏதோ கிறுக்கி அனுப்பிவிட்டு மறந்து போன அடுத்த வாரம் முகம் மாமணி அவர்களிடம் இருந்து கடிதம் ,,,வெளியிட தேர்வு செய்திருப்பதாகவும் கூடவே என் புகைப்படம் கேட்டு ….. அந்த கணம் … இலக்கியவாதி அங்கிகாரம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி தலைகால் புரியாமல் வண்ணத்து பூச்சியாய் என்னை சுற்றியது ……

அந்த நிமிர்ந்தால் வாணம் சிறுகதை உங்களுக்காக …..




 
Tweet