Pages

Posted on: Thursday, October 23, 2014

வடலிமரம் நாவல் மதிப்புரை ..(விமர்சனம்) ....

வடலிமரம் நாவல்  மதிப்புரை ..


ஆணோ , பெண்ணோ பதின் பருவத்தை கடந்த எல்லோரும் எதாவது ஒரு விதத்தில் காதலை கடந்து தான் வந்திருப்பார்கள் என்பது உண்மையானால், நிச்சயம் இந்த விடலிமரம் நாவலை படித்து முடிக்கையில் அந்த உணர்வை மறுமுறை அனுபவித்து மகிழ்ந்திருப்பர் ….!

பதின் பருவத்தினரின் மெல்லிய காதல் உணர்வை இவ்வளவு அழகாக, இயல்பாக யாராலும் மொழி பெயர்த்திருக்க முடியாது,  என் நண்பர் ஐரேனிபுரம் பால்ராசையாவை தவிர என இந்த நாவலை முடிக்கும் போது பெருமைப்பட்டேன்.

பனை ஏறிகள் என்று அழைக்கப்படும் அழிந்து வரும், மறக்கப்பட்டு வரும் ஒரு வரிய இனத்தின் வாழ்கை முறையோடு, பதின் பருவ காதலை பிணைத்து மார்தாண்டம் குழித்துறை திருவட்டாறு  என்று தென் தமிழகத்தின் பத்து வருடத்திற்கு முன்புள்ள கால கட்டத்திற்கு நமது பதின் பருவ நினைவோடு பயணப்பட வைக்கிறார் நாவலாசிரியர் பால்ராசய்யா.

காதலுக்கு பெற்றோர்களையும் தாண்டி இந்த சமூக மற்றும் பொருளாதார காரணிகள் எவ்வளவு பெரிய எதிரி என்பதை அரிதாரமில்லாமல் இயல்பாய்   காதல் வெற்றி பெற்றாலும் சமூக போருளாதாரத்தில்  தோற்றுப்போன கணவன் மனைவியாய் படும் துயரத்தையும் அவர்கள் பெற்றோரால் பிரிக்கப்படுவதையும்  இயல்பாய் சொன்னவிதம் அனுபவிக்க வைக்கிறது

பதின் பருவ காதல் உணர்வை மறுபடியும் சுமக்க விரும்பும் அணைவரும் தவறாமல் படிக்கவேண்டிய நாவல் வடலிமரம்.
  
நாவல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9791820195/09020711128
 
Tweet